சுவாமி சங்கரானந்தாவின் சைவப் படைப்புகள்

சிவக்கவி

அடு பட அளாவி ஒரு படக் குலாவி

சிவக்கவி — சிவபெருமான் படம்
01

அடு பட அளாவி ஒரு படக் குலாவி விடு படா உலகில் ………. திரிந்தேனே

02

கடு பட உலாவி வடு பட ஆளாகி தெரி படச் சிவனை ………. உணர்ந்தேனே

03

நெடு முடி முராரி முளரி யான் பிரம்மன் அறிந் திடாவந்தப் ………. பெரியோனை

04

நெறி படத் தழுவி மொழி வளத் துழாவி வழி படத் தமிழால் ………. புகழ்ந்தேனே

05

விடை யுடன் ஏகும் உமை ஒரு பாகன் மதி நதி சூடும் ………. சிவனாரே

06

திரி புரம் எரிய வழி சமை அண்ணல் கொடு வினைஅழித்து ………. அருள்வோனே

07

கடல் அலை சூழும் திரு மலை மேவி நல மதை நல்கும் ………. பெருமானே

08

தடை உடை பலமும் பணம் முடை வளமும் நினைத்ததும்எனக்குத் ………. தருவாயே

சுவாமி சங்கரானந்தா🙏சைவ சனாதன சேவை மையம்