இலங்கையில் எமது ஆன்மீக மற்றும் அறப்பணித் தொடர்பு

ப்ரத்யங்கிரா சக்தி பீடம் அறக்கட்டளை

தெல்லிப்பளை வீதி, வட்டுக்கோட்டையில் இயங்கிவரும் ப்ரத்யங்கிரா சக்தி பீடம் அறக்கட்டளை, ஆன்மீக வழிபாடுகளோடு மனிதநேய அறப்பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

ப்ரத்யங்கிரா சக்திபீடம் மற்றும் அறக்கட்டளை அறிமுகம்

ஆன்மீகமும் சேவையும் இணையும் பணி

ப்ரத்யங்கிரா சக்திபீடம் மற்றும் அறக்கட்டளை பூசை வழிபாடுகள், அன்னதானம், கோசாலை பராமரிப்பு மற்றும் தேவைக்கேற்ற பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இறைபக்தியோடு உயிர்களுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்வதை மையமாகக் கொண்டு இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், அறப்பணிகள் ப்ரத்யங்கிரா அறக்கட்டளையின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

ப்ரத்யங்கிரா சக்தி பீடம்
ப்ரத்யங்கிரா சக்தி பீடம்
01

திருத்தலமும் தொன்மையும்

ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி சமேத ஸ்ரீ மஹா கால பைரவர் தேவஸ்தானம்

இத்தேவஸ்தானம் 2011 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இத்தலத்தின் ஆதி ஞான வைரவர் (தான்தோன்றீஸ்வரர்) 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்.

02

முக்கிய பணிகள்

01

பூசை வழிபாடுகள்

இறைவழிபாடுகளும் ஆன்மீக நிகழ்வுகளும்.

02

அன்னதானம்

தேவையுடையவர்களுக்கு உணவு வழங்கும் அறப்பணி.

03

கோசாலை பராமரிப்பு

பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான சேவை.

04

அறப்பணி உதவிகள்

சமூகத் தேவைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் மனிதநேய உதவிகள்.

03

சைவ சனாதன சேவை மையத்துடனான தொடர்பு

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சைவ சனாதன சேவை மையம், இலங்கையில் முன்னெடுக்கும் அறப்பணி உதவிகளை, இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள ப்ரத்யங்கிரா அறக்கட்டளை மற்றும் சக்தி பீடத்தின் ஊடாகச் செயற்படுத்தும்.

பதிவு மற்றும் தொடர்பு

பதிவு மற்றும் தொடர்பு

இடம்
தெல்லிப்பளை வீதி, வட்டுக்கோட்டை, இலங்கை
தேவஸ்தானப் பதிவெண்
HA/5/JA/1397
அறக்கட்டளை NGO பதிவெண்
ட-177904 (NGO)
தொலைபேசி
021 225 2020
கைப்பேசி / WhatsApp
+94 77 645 1254
WhatsApp மூலம் தொடர்புகொள்ள →